சிவகங்கை-சிவகங்கையில் பிரீத்தி அங்கயற்கண்ணி எழுதியஅன்பெனப்படுவது யாதெனில் என்ற சிறுகதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். தமிழாசிரியர்திருமுருகன் வரவேற்றார். தமிழாசிரியர் லோபமித்ரா அறிமுகம் செய்து பேசினார். தமிழாசிரியர் இளங்கோ, தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா முன்னிலை வகித்தனர்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ப.நாகராஜன் புத்தகத்தை வெளியிட்டார். முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரம் பெற்றுக்கொண்டார்.
த.மு.எ.க.ச., மாவட்டதலைவர் தங்கமுனியாண்டி, தமிழாசிரியர்கள் வாசுதேவன், வே.தெய்வேந்திரன், அயோத்தி கண்ணன், பேச்சாளர் ராஜாராம், சிவகங்கை தமிழ்சங்க நிறுவனத்தலைவர் ஜவஹர்கிருஷ்ணன், தொல்நடைகுழுத்தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், தலைமையாசிரியர் சுதாகர், தமிழாசிரியர்கள் கரிகாலன், நடனசுந்தரம் வாழ்த்தினர். நுாலாசிரியர் பிரீத்தி அங்கயற்கண்ணி ஏற்புரையாற்றினார்.