கோயில்
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா 6ம் நாள்: திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன், தங்க ரிஷப வாகனத்தில்சுவாமி உலா, சித்திரை வீதிகள், மதுரை, இரவு 7:00 மணி.
தைப்பூச திருவிழா 4ம் நாள்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா, மாலை 6:00 மணி.
திருவிளக்கு பூஜை: ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர் மண்டபம், சிருங்கேரி சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: தெலுங்கு பிராமண சங்கம், காலை 10:00 மணி.
ஆஞ்சநேயர் 15ம் ஆண்டு லட்சார்ச்சனை: குருகுலம் துவக்கப்பள்ளி, சுப்பிரமணியபுரம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 6:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு
சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம், சொற்பொழிவு: நிகழ்த்துபவர்- நந்தகுமார், தெய்வநெறிக்கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
பள்ளி, கல்லுாரி
சுவாமி சித்பவானந்தர் 125வது ஆண்டு விழா, சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி 39வது ஆண்டு விழா: சிம்மக்கல், மதுரை பங்கேற்பு: முதல்வர்முனீஸ்வரி, சுத்தானந்தா, கமலாத்மானந்தா, பொற்பொழிவு: பேராசிரியர் சொ.சொ.மீ., சுந்தரம், விவேகானந்த கல்லுாரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியம், மதுரை, காலை 7:00 மணி முதல்.
பாண்டிய நாட்டில் வரலாற்று பெருவிழா: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, தலைமை: ஓய்வுபெற்ற வருமான வரித்துறை கமிஷனர் கணேசன், பங்கேற்பு: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி, முதல்வர் வேணுகா, சிறப்பு விருந்தினர்கள்: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உதவி பதிவாளர் விஜயன், கவிஞர் உமாபாரதி, காலை 10:00 மணி.
11வது பட்டமளிப்பு விழா: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, பங்கேற்பு: லதா மாதவன் கல்வி குழும நிறுவனர்மாதவன், நீதிபதி ராஜவேல், ஜே.என். மிஷினரீஸ் நிறுவன மேலாளர் முருகானந்த கணேஷ், காலை 10:00 மணி.
75வது மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்ச்சி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி,தலைமை: முதல்வர் கண்ணன்,காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் தேவதாஸ், காலை 11:30 மணி.
பொது
மதுரை டீ காபி வர்த்தகர் சங்க 35வது ஆண்டு விழா: சந்திர குழந்தை மகால், தெப்பக்குளம், மதுரை, துவக்குபவர்: தலைவர் முத்துமாணிக்கம், தலைமை: செயலாளர் மீனாட்சி சுந்தரேஷ்,பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், காலை 10:30 மணி.
சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, மதுரை, தலைமை: கவிஞர் ரா.ரவி, முன்னிலை: புரட்சிக்கவிஞர் மன்றத்தலைவர் வரதராஜன், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
மேடைப் பயிற்சி- வாங்க பேசலாம்: வள்ளலார் மையம், பொன்னகரம் பிராட்வே, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை, பங்கேற்பு: சண்முக திருக்குமரன், ஏற்பாடு: மதுரை இலக்கிய பேரவை, காலை 10:30.
பேராசிரியர் தொ.பரமசிவத்தின் ஆய்வு முறையியல் குறித்த கலந்துரையாடல்: ஸ்ரீராம் மெஸ் மீட்டிங் ஹால், மேலப்பெருமாள்மேஸ்திரி வீதி, மதுரை, ஏற்பாடு: வைகை வாசிப்பு வட்டம், மதியம் 3:30 மணி.
உமாதேவி அழகர்சாமி நினைவு அறக்கட்டளை ஆன்மிக இலக்கிய விழா: மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, தலைமை: பாண்டுரங்கன், பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சங்கீத் ராதா, மாலை 6:30 மணி.
வணிகத்தை விரிவுபடுத்த வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்: அசல் மலபார் பீடி மாளிகை, விமான நிலைய ரோடு, அவனியாபுரம், மதுரை, ஏற்பாடு: நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம், தலைமை: தலைவர் குற்றாலிங்கம், பங்கேற்பு: ஸ்டேட் வங்கி மண்டல வணிக மேலாளர் ஹரிணி, மாலை 5:00 மணி.
பட்டமளிப்பு விழா: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், தலைமை: நிறுவனர் மாதவன், பங்கேற்பு: மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராஜவேல், காலை 10:00 மணி.
பா.ஜ.,நகர் மாவட்ட செயற்குழு கூட்டம்: அன்னை மகால், சினிப்பிரியா தியேட்டர் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பங்கேற்பு: மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், மதியம் 3:30 மணி.
மருத்துவம்
டாக்டர் மனோரமா நினைவு தினத்தை முன்னிட்டு குழந்தைப்பேறுக்கான ஸ்கேன்கள், இலவச பரிசோதனைகள்: சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.
குழந்தைபேறு சிறப்பு மருத்துவமுகாம்: ஈஸ்வரா மருத்துவமனை, தல்லாகுளம், மதுரை, பங்கேற்பு: டாக்டர் பிரியதர்ஷினி, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
விளையாட்டு
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 9:00 மணி.
அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாநில கூடைப்பந்தாட்டம் போட்டி: ஆலங்கொட்டாரம், சோழவந்தான், பங்கேற்பு: எம்.எல்.ஏ., வெங்கடேசன், சோழவந்தான் சேர்மன் ஜெயராமன், நகர் செயலாளர் சத்தியபிரகாஷ், ஏற்பாடு: தி.மு.க., காலை 7:00 மணி முதல்.
கண்காட்சி
லண்டன் பிரிட்ஜ் துபாய் சிட்டி பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 10:30 மணி வரை.
தேசிய ஆர்ட், கிராப்ட் கைவினைபொருட்கள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
காட்டன் பேப் ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி விற்பனை: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.