சிறுபாக்கம் :: மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், முருகன், துணைச் சேர்மன் கலைச்செல்வி செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் ராஜாராமன் வரவேற்றார்.
கூட்டத்தில், 15வது நிதிக்குழு மானிய திட்டப்பணிகளை துவக்குவது, ஒன்றிய கவுன்சிலர்கள் செயல்படுத்தும் திட்டப்பணிகளுக்கு, பொறியாளர்கள் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் பணிகளை முடித்த பின், மதிப்பீடு தொகையை விரைந்து வழங்குவது, ஒன்றிய பணிகளில் கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொறியாளர்கள் செந்தில்வடிவு, முருகவேல், ராமச்சந்திரன், செந்தில், துணை பி.டி.ஓ.,க்கள் கணபதி, சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், கொளஞ்சி, பானுமதி, மல்லிகா, செல்வராணி உட்பட பலர் பங்கேற்றனர்.