கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, கடன் பெறுவது உள்ளிட்டவை குறித்து கூடுதல் முதன்மை செயலாளர், அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.