வடலுார்: கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் சார்பில், வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
கடலுார் மண்டல இணை இயக்குனர் கஸ்தூரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் குமரவேல் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் ராஜா, மணிகண்டன், ஆரோக்கியசாமி, ஆறுமுகம், கால்நடை ஆய்வாளர் ஷகிலா ஆகியோரை கொண்ட குழுவினர், வெறிநாய் கடி குறித்தும், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் குமார், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் ரவீந்திரன் ஆகியோரை கொண்ட குழுவினர், 200க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளித்தனர்.
கால்நடை உதவியாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி, வேலாயுதம், உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.