விருத்தாசலம் : திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் பகுதியில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக, விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு, பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விளக்கினர்.
மேலும், உயிரியல் பூஞ்சாணக் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினர்.