சேந்தமங்கலம், ஜன. 29-
சேந்தமங்கலம், வடுகப்பட்டி, அக்கியம்பட்டி, முத்துகாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், 300 பேர், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோவிலுக்கு, பாதயாத்திரையாக சேந்தமங்கலத்தில் இருந்து, 7 நாட்கள் நடை பயணமாக செல்வது வழக்கம்.
நேற்று புறப்பட்ட பாதயாத்திரை குழுவினருக்கு, சேந்தமங்கலம் யூனியன் உறுப்பினர் ஸ்ரீபாலன் பங்கேற்று, 300 பேருக்கு, வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் வழங்கி நடை பயணத்தை துவக்கி வைத்தார். அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாத பூஜை செய்து வழிப்பட்டனர். 20ம் ஆண்டாக நடை பயணமாக செல்லும் பக்தர்கள் நாமக்கல், மோகனுார், வாங்கல், கரூர், மணல்மேடு ஆகிய ஊர்கள் வழியாக நடை பயணமாக பழநி முருகன் கோவிலுக்கு சென்றடைந்து, பால்குடம், காவடி எடுத்துக் கொண்டு கிரிவலம் சென்று சுவாமியை வழிபட உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை பழநி பாதயாத்திரை குழுவை சேர்ந்த, குருசாமி முருகேசன், நிர்வாகிகள், செய்திருந்தனர்.