நாமக்கல், ஜன. 29-
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., முன்னோடிகள், 1,240 பேருக்கு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கினார். முன்னதாக அமைச்சர் உதயநிதிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில், கழக முன்னோடிகளின் மருத்துவ செலவு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கல்விக்காக, 10 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், 1,000 முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. ஆனால், நாமக்கல்லில், 1,240 பேருக்கு ராஜேஷ்குமார் பொற்கிழி வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி.,யும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் சுந்தரம், அயலக அணி துணை செயலாளர் முத்துவேல் ராமசுவாமி, ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், ராசிபுரம் சேர்மன் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* இதேபோல், நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில், 1,008 மூத்த தி.மு.க., முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, திருச்செங்கோடு கரட்டுபாளையத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தி.மு.க., இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, பொற்கிழி வழங்கி பேசினார்.
விழாவில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், நகர செயலாளர் கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, ஊராட்சி ஒன்றிய தலைவர் சுஜாதா தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.