திருச்செங்கோடு, ஜன. 29-
திருச்செங்கோடு ஆறுமுக சுவாமி திருக்கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, 51 ஆண்டுகளுக்கு பின் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செங்கோட்டில், 1971ம் ஆண்டுக்கு பின் நிதி நெருக்கடி காரணமாக, தைப்பூச தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தைப்பூச தேர்திருவிழா நடத்த வேண்டும் என, பொதுமக்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்திலிடம் கேரிக்கை வைத்தனர். அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு அனுமதி பெற்று, நேற்று ஆறுமுகசுவாமி திருக்கோவில் மற்றும் கைலாசநாதர் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிப்., 4ம் தேதி சனிக்கிழமை கைலாசநாதர் ஆலயத்தில் சுகுந்தகுந்தலாம்பிகை அம்மனுக்கும், ஆறுமுக சுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பிப்., 5 காலை, 10:00 மணிய ளவில் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. கடந்த, 51 ஆண்டுக்கு பின் நடைபெறும் திருவிழா என்பதால் கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.