நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே, கொளப்பள்ளி செல்லும் சாலையில், சிறுத்தை குட்டி ஓய்வெடுத்த நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில், சேரங்கோடு டான்டீ கோட்ட அலுவலகம் அருகே, சில நாட்களுக்கு முன், புதரை ஒட்டிய பாறையில், பெரிய சிறுத்தை ஒன்று படுத்திருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, இப்பகுதி சாலையில், சிறுத்தை குட்டி ஒன்று, ஓய்வெடுத்திருந்ததை கண்ட, வாகன ஓட்டிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையிலான குழுவினர், சிறுத்தை குட்டியை விரட்டி, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.