பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நாயன்மார்கள் வேள்வி பூஜை, விமரிசையாக நடந்தது.
பொள்ளாச்சி, தென்கைலாய பக்தி பேரவை சார்பில், வி.கே.சி., லே--அவுட்டில் உள்ள, திருமண மண்டபத்தில், நாயன்மார்கள் வேள்வி விழா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு குருபூஜையும், 8:30 மணிக்கு சத்குரு ஸ்ரீ பிரம்மா வேள்வி மற்றும் நாயன்மார்கள் வேள்வியும் நடந்தது.
இந்த வேள்வியை முன்னிட்டு யாகசாலை வளர்க்கப்பட்டு, விநாயகர் துதியும், சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றன. தொடர்ந்து, நாயன்மார்கள், சத்குரு ஸ்ரீ பிரம்மா, இசைஞானியார் நாயனார், காரைக்கால் அம்மையார் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், பால், நெய் உட்பட ஒன்பது வகையான திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிேஷகமும், ஆராதனையும் நடந்தது.
நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். வேள்வியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.