மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சி, திருக்கச்சூர் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், பழமையான தியாகராஜர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், மாத பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய தினங்களில், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்த கோவிலுக்கு வலது புறத்தில் குளம் உள்ளது. இந்த குளம், பாழடைந்து தண்ணீர் முழுதும் பாசி படிந்து, ஆகாயத்தாமரை படர்ந்து காணப்பட்டது.
பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்பட்டது.
இது குறித்து, நமது நாளிதழில், கடந்த 18ம் தேதி, படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மறைமலை நகர் நகராட்சி, நகரங்களின் துாய்மைக்கான இயக்கம் சார்பில், நகராட்சி துாய்மை பணியாளர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று, குளத்தில் படர்ந்து இருந்த ஆகாயத்தாமரை, குப்பையை அகற்றி, கரைக்கு கொண்டு வந்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.