மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட கலைச்சின்னங்கள், இந்திய, சர்வதேச பயணியரை கவர்ந்து, சுற்றுலா வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் பிற மாவட்டங்களின் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர், ஆண்டு இறுதித் தேர்விற்கு முன், கல்வி சுற்றுலா வருவர்.
தற்போதும். ஆண்டு இறுதித் தேர்விற்கு தயாராகும் நிலையில், பல பகுதிகளிலிருந்து இங்கு மாணவ - மாணவியர் குவிகின்றனர்.
பள்ளிப் பேருந்து, வேன், சுற்றுலா பேருந்து ஆகியவற்றில், சில நாட்களாக படையெடுக்கின்றனர். சிற்பங்கள், கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், கடற்கரை என கண்டு மகிழ்கின்றனர்.
சிற்பங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கிக் கூறுவதை வியந்து கேட்கின்றனர். குன்றுகளில் உற்சாகத்துடன் ஏறி குதுாகலிக்கின்றனர்.