திருப்பூர் : கோடை விடுமுறைக்கு முன்னதாக, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
நடப்பு கல்வியாண்டு (2022 - 2023) மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 6 முதல், 20ம் தேதி வரையும், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச் 14ல் துவங்கி, ஏப்., 5 வரையும், பிளஸ் 2 பொதுதேர்வு மார்ச் 13 முதல், ஏப்., 3 வரையும் நடக்கிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது ஒன்பது, பத்து, பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நிறைவு பெற்றவுடனோ, கோடை விடுமுறைக்கு முன்னதாகவோ அவர்கள் அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
பொதுத்தேர்வை அவர்கள் எதிர்கொள்வதற்கு, இது உதவும். கடந்த 2022ம் ஆண்டு நவ., - டிசம்பரில், பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்கி விட்டது. பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும்' என்றனர்.