பந்தலுார் : பந்தலுாரில் கடந்த, 20 ஆண்டுகளாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த திருமண மண்டபத்திற்கு நகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' அனுப்பியது.
தொடர்ந்து, நெல்லியாளம் நகராட்சி சார்பில் பாரிஸ் ஹால் நிர்வாகத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு, மண்டப கதவிலும் ஒட்டப்பட்டது.
கமிஷனர் மகேஸ்வரி கூறுகையில்,''கடந்த, 20 ஆண்டுகளாக, உரிய அனுமதி பெறாமல் பாரிஸ் ஹால் எனும் பெயரில் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது.
நகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு மண்டபம் செயல்பட துவங்கியது முதல், உரிம தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.