கோவை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில், கோவையிலிருந்து திருப்பதிக்கு, சிறப்பு தரிசனத்துடன் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
நடப்பாண்டு, திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, கோவை - திருப்பதி இடையிலான சுற்றுலா ரயில் சேவை துவக்கிவுள்ளது. அதன்படி, பிப்., 7 மற்றும் 14ம் தேதியன்றும், மார்ச் 7, 14, 28ம் தேதியன்றும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்று, திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக, இரண்டாம் வகுப்பு இருக்கையில் ஒருவருக்கு, 4,580 ரூபாயும், ஏ.சி., இருக்கை, 7,200 ரூபாயும் கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. ரயில் பயணக்கட்டணம், திருப்பதி சிறப்பு தரிசன கட்டணம், உணவு, சுற்றுலா வழிகாட்டி, தங்கும் வசதி, உள்ளூர் பயணம் ஆகியவை அடங்கும். விவரங்களுக்கு, www.irctctourism.com என்ற இணைய முகவரியிலோ, 90031 40655 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.