ஆரணி : போலீசாரை தரக்குறைவாக பேசிய, வி.சி., நிர்வாகிகள் உட்பட, 15 பேரை ஆரணி போலீசார் கைது செய்தனர். கட்சியின் மாவட்ட செயலரை தேடி வருகின்றனர்.
அவர் புகாரின்படி ஆரணி டவுன் போலீசார் விசாரித்தனர். அப்போது வி.சி., கட்சி மாவட்ட செயலர் பாஸ்கர், ஒன்றிய செயலர் ரமேஷ் உள்ளிட்டோர், போலீசாரை தரக்குறைவாக பேசவே, இருவரையும் கடந்த, 8ல் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த, 26ல் ஜாமினில் இருவரும் வெளியில் வந்தனர். ஆரணியின் முக்கிய வீதியில் அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற வி.சி.,கட்சியினர், அப்போது போலீசாரை அவதுாறாக பேசினர்.
இது தொடர்பாக, ஆரணி போலீசார், 50க்கும் மேற்பட்டோர் மீது நேற்று வழக்கு பதிந்தனர். மேலும், வி.சி., நகர செயலர் சார்லஸ், மேற்கு ஆரணி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட, 15 பேரை கைது செய்தனர். மாவட்ட செயலர் பாஸ்கர் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.