புதுச்சேரி : புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் பாதயாத்திரை செல்லும் நிகழ்வையொட்டி, காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வடமாநிலங்களில் பாதயாத்திரை செல்லும் ராகுல் எம்.பி.,யை ஆதரித்து, புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் காங்., சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காமராஜ் நகர் தொகுதி முழுவதும் பாதயாத்திரை செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.