வில்லியனுார் :வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற குழுவினருக்கு அலுவலகத்தில் பரிச ளிப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்குமார் தலைமை தாங்கி,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, விரிவாக்க அதிகாரிகள் ரங்கநாதன், ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.