விழுப்புரம், : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வடக்கு மண்டலம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் பேட்டரிக்ரெய்மான்ட் கண்டன உரையாற்றினார். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அப்போது, நிர்வாகிகள் சசிகுமார், லட்சுமிவெங்கடேஷ், செல்வத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.