விழுப்புரம் : மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று போலீசார் குட்கா சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, விழுப்புரம் தாலுகா போலீசார் இந்திரா நகரில் மூர்த்தி, 55; மற்றும் ஜானகிபுரத்தில் குமரவேல், 28; ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோன்று, மாவட்டம் முழுவதும் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.