விழுப்புரம், : டிராக்டர் டிப்பரில் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன், 47; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மடுகரையிலிருந்து சிறுவந்தாடு நோக்கி பைக்கில் வந்தார்.
சிறுவந்தாடு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது அங்கு எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் டிப்பரின் பின்னால் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த காசிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.