திண்டிவனம், : சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில், ஓங்கூர் பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதிய ஆட்டோ ஆற்றில் விழுந்தது. இதில் ஓட்டுனர் படுகாயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல், 25; இவர் நேற்று இரவு 8;30 மணிக்கு, சென்னை மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் ஆற்றுப்பாலத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி, 25 அடி உயரத்தில் இருந்து ஆற்று தண்ணீரில் விழுந்தது இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி, பழனிவேல் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார், காயமடைந்த பழனிவேலுவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் விழுந்த ஆட்டோவை கிரேன் மூலம் மீட்டனர்.