விழுப்புரம்,: விழுப்புரம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார்.
கலைமாமணி டாக்டர் ரோபோ சங்கர், வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில செயலாளர் டாக்டர் கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
வகுப்பில் முதன்மையிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. கர்ணன் நாடகம் , பெருமாளின் அவதாரங்கள் மற்றும் கண்ணாடி நடனம், மேஜிக் லைட் நடனம் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் மகாலஷ்மி குரூப்ஸ் நிர்வாக இயக்குநர்கள் வெங்கடேஷ், ராஜேஷ், வழக்கறிஞர்கள் நாகராஜன், தேவேந்திரன், இரு சக்கர மோட்டார் வாகன மெக்கானிக்குகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சம்பூர்ணம், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.