மரக்காணம் : மரக்காணம் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் இறந்தார்.
மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தை சேர்ந்த ராஜ் மகன் ராஜேந்திரன், 22; மணிபால் மகன் செல்வா, 22; ஆகிய இருவர்களும் கூனிமேடு அருகே இ.சி.ஆர்., ஓரம் பைக்கை நிறுத்திவிட்டு மொபைலில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதி பின் இருவர்கள் மீதும் மோதியது. அதன் பின் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வரத்துவாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆபத்தான நிலையில் செல்வாவை புதுச்சேரி பிம்ஸ் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.