திண்டிவனம் : திண்டிவனம் தனியார் எலக்ட்ரானிக் கடையில் போலி ஆவணம் கொடுத்து ஏசி வாங்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் காவல் நிலையம் எதிரே தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. இதில், புதுச்சேரி உழவர்கரை, ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் ஜெயக்குமார்,36; என்பவர் கடந்த 10ம் தேதி தவணை முறையில் மொபைல் போன் வாங்கி உள்ளார். மீண்டும் 27ம் தேதி மாலை அவரது நண்பர் எனக்கூறி அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் முனுசாமி,29; என்பவரது ஆவணங்களை கொடுத்து ஏ.சி., வாங்கி உள்ளார்.
பின்னர் அவர் கொடுத்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது.
இது குறித்து ராஜ்கமல் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.