கடலுார்,: 'சாதுக்களை ரவுடிகளாக சித்தரிக்கப்படுவதை முறியடிக்க வேண்டும்' என, நாகமலை சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் பேசினார்.
கடலுாரில், சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டில் அவர் பேசியதாவது:
மாநாட்டில் கூடியிருப்பவர்கள் அனைவரும் இந்து உணர்வோடு கூடியிருக்கிறோம். காசுக்காக கூடிய கூட்டம் இல்லை. அதனால், ஆயிரம் பேர் இருந்தாலும், லட்சம் பேருக்கு சமம்.
இந்து மக்களிடம் இவ்வளவு சன்னியாசிகள், சாதுக்கள் இருந்தும் எழுச்சியை ஏற்படுத்த முடியாதற்கு, திட்டமிட்டு பரப்பப்படும் சதியே காரணம்.
இந்து மதத்தை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்து மதத்தை கேவலமாக பேசுவது, உத்தராட்சம், காவி உடை அணிந்தவர்களை வில்லனாக, ரவுடிகளாக சினிமாவில் சித்தரித்து, மக்கள் மனதில் சாதுக்கள் பற்றிய தவறான எண்ணத்தை துாண்டுவது போன்ற செயல்கள் மூலம், இந்து மதத்தை கேவலப்படுத்தி வருகின்றனர். இதை சன்னியாசிகள், சாதுக்கள் முறியடிக்க வேண்டும்.
சனாதன எழுச்சி எல்லாருடைய உணர்விலும் வர வேண்டும். இந்து மதத்தில் ஜாதி பாகுபாடு இல்லை. இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, சுவாமிகள் பேசினார்.