திண்டுக்கல்--திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாகல்நகர் ஜிம்.ஆ., பள்ளிவாசல், ஜங்ஷன் பள்ளிவாசல் இணைந்து நடத்திய ரசுலுல்லா கந்துாரி விழா நாகல் நகர் பள்ளிவாசலில் நடந்தது.
3000 கிலோ அரிசி, ஆயிரம் கிலோ கறி, 3ஆயிரம் கிலோ கத்தரிக்காய், 500கிலோ நெய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரியாணி 20ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.பள்ளி வாசல் நிர்வாகிகள் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக பங்கேற்று பிரியாணியை வாங்கி சென்றனர்.