திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை மூலம் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது.
இப்பணி அழகாபுரி அணை, சீலப்பாடி கண்மாய், ஆத்துார் காமராஜர் நீர்தேக்கம் உள்ளிட் 20 நீர்நிலைகளில் கணக்கெடுக்கும் பணி மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் நடந்தது.
கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நீர் நிலைகள் அருகில் சாம்பலநிற வாத்து,ஆசிய பனை உழவாரன்,நாமக்கோழி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, ஆற்று உள்ளான், ஆற்று ஆலா, மஞ்சள் மூக்கு நாரை, செம்பூத்து, கரிய அரிவாள் மூக்கன், வெண்கொக்கு, தேன்சிட்டு, வரி வாலட்டிக்குருவி, வெணமார்பு உப்புக்கொத்தி, தாமிர இறக்கை இலைக்கோழி, கொசு உள்ளான், அன்றில்நீலவாள் பஞ்சுருட்டான், பனங்காடைதவிட்டுக்குருவி, கம்புள் கோழி உள்ளிட்ட 108 வகையான 5323 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.