திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம்,பி.எஸ்.என்.ஏ., நடத்தும் பி.எஸ்.என்.ஏ., கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையேயான 30 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் ஜான்பால் மேல்நிலைப்பள்ளி, வேலம்மாள் போதி கேம்பஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஜான்பால் பள்ளி அணி 30 ஓவர்களில் 532 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. மாணவர்கள் பிரகாஷ்ராஜ் 208, தீபன் 132, ஆதிசிவன் 77 ரன்கள் விளாசினர்.
இதில் மாணவன் பிரகாஷ்ராஜ் 30ஓவர் கிரிக்கெட்டில் மாவட்ட அளவில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
சேசிங் செய்த வேலம்மாள் போதி கேம்பஸ் அணி 8ஓவர்களில் 13ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சர்வின் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 7 விக்கெட், கிரிஸ்ராகுல் 3 விக்கெட் வீழ்த்தினர்.