செஞ்சி : செஞ்சி சாணக்கியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் யாஸ்மின் வரவேற்றார். பள்ளி முதல்வர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார்.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி மஸ்தான், தன்னம்பிக்கை பேச்சாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றி, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கினர்.
மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருள்மொழி, மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி முதல்வர் ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சப்ரூன் நன்றி கூறினார்.