திண்டுக்கல்--திண்டுக்கல் கால்பந்து கழகம் சார்பில் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் சன் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் கால்பந்து கழகம் சார்பில் புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடந்த முதல் டிவிஷன் போட்டியில் சன் ஸ்போர்ட்ஸ், அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் சன் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜூல் பிஹார் அகமது 2, நிரஞ்சன் 1, அமர்நாத் 1 கோல் அடித்தனர்.அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் அணி சார்பில் செல்வகணேசன் 1, அலாவுதீன் 1 கோல் அடித்தனர்.2ம் டிவிஷனுக்கான போட்டியில் எஸ்.பி.எம்., கால்பந்து அணி, கரிசல்பட்டி கரிசல் அணிக்கும் நடந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்.பி.எம்., அணி வெற்றி பெற்றது. மகேந்திரன் 2 கோல் அடித்தார்.2து டிவிஷனுக்கான மற்றொரு போட்டியில் மைக்கேல்பாளையம் செயின்ட் மைக்கேல் அணி, சுந்தரம் நினைவு கால்பந்து அணிகள் மோதின.
3-1 என்ற கணக்கில் செயின்ட் மைக்கேல் அணி வெற்றி பெற்றது.
பிரவீன்ராஜ் 1, டென்சிங் ரெக்ஸ் 1, ஜான்சன் அருள் 1 கோல் அடித்தனர். சுந்தரம் நினைவு கால்பந்து அணி சார்பில் எட்வின் ஜோயல் ஒரு கோல் அடித்தார்.
3வது டிவிஷனுக்கான போட்டியில் ஏ.பி.சி., பாலிடெக்னிக், மேட்டுப்பட்டி மேரிமாதா அணிகள் மோதின. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.பி.சி., பாலிடெக்னிக் அணி வெற்றி பெற்றது.
சந்தானகுமார், தண்டபாணி, பசுபதி தலா ஒரு கோல் அடித்தனர்.மேட்டுப்பட்டி மேரிமாதா அணி சார்பில் டிராவிட் ஆன்டோ ஒரு கோல் அடித்தார்.