ரெட்டியார்சத்திரம்,-ஸ்ரீராமபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சகிலா தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் அருள்சாமி, வட்டார வளமைய பொறுப்பு அலுவலர் மேகலாதேவி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனாத்தாள் முன்னிலை வகித்தனர்.
ஆசிரிய பயிற்றுநர்கள் ரமேஷ், அபிராமி, ஜானகிராமன், முருகன், ஆசிரியர்கள் ராஜ்மோகன், சரவணஜோதி, முருகேசன் பேசினர். திட்ட செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கோஷங்களுடன் பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.