கடலுார் : 'சனாதன இந்து தர்மத்தை வளர்க்க, கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபடுவேன்' என, தென்னிய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் பேசினார்.
ஆனால், கடலுாரில் சனாதன மாநாட்டிற்கு போலீஸ் தடை விதிக்கிறது. இந்துக்களை அழிக்க முயற்சி நடக்கிறது.
டி.ஆர்.பாலு மதுரையில் பேசும்போது, 'வெட்டுவேன்' என வன்முறையாக பேசுகிறார். முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என்கிறார். அவர் மீது வழக்கு போட போலீசுக்கு துணிவு இல்லை.
நான் இருந்த பகுதியில் 3 இந்து கோவில்களை இடித்தோம் என்கிறார். உங்களிடம் ஓட்டு வாங்குவது எப்படி என்று தெரியும் என, மக்களை கேவலமாக பேசுகிறார்.
சனாதனத்தை வேர் அறுப்போம் என, ஒருவர் பேசுகிறார். கர்நாடக மாநிலத்தில் பயங்கரவாதிகளை வைத்து சன்னியாசிகளை மிரட்டுகிறார்கள். தெய்வீகத்திற்காக தலையை கொடுத்தவர்கள் நாங்கள். இந்து சனாதன தர்மத்தை வளர்க்க கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபடுவோம்.
தர்மத்தை துாக்கி பிடிப்போம். சனாதான தர்மம் இருந்தால் மட்டுமே நாடு காப்பாற்றப்படும்.
இவ்வாறு, திருமாறன் பேசினார்.