திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். மாநகர திமுகவினர் இரண்டு கோஷ்டியினராக செயல்படுகின்றனர். கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், மாநகர செயலாளர் சுப்ரமணியன், பகுதி செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தினமும் மாநகராட்சியில் மேயர் அறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து காண்ட்ராக்டர்களிடம் பேசுகின்றனர். எனவே அவர்களை நீண்ட நேரம் இருக்க அனுமதிக்ககூடாது என்றார்.
இதுகுறித்து பேசிய கமிஷனர், இந்த பிரச்னையில் தேவைப்பட்டால் போலீசில் புகார் செய்யப்படும் என்றார். மாநகர தி.மு.க., கோஷ்டி பூசல் இன்று மாநகராட்சி கூட்டத்திலும் எதிரொலித்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் சுந்தர் மற்றும் ரவீந்தருக்கிடையே மோதல் ஏற்பட்டது.