ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில், மண்டியம்மன் கோவில் திருவிழா கடந்த 22 ம் தேதி இரவு நடந்தது. அதில் கிரேனில் அந்தரத்தில் பறந்து வந்தபடி அம்மனுக்கு, மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்த போது கிரேன் சாய்ந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகினர்.
நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் உரிமையாளர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன், 32, என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் கிரேன் டிரைவர் பனப்பாக்கம் அருண், 27, விழாக்குழுவினர் சதீஷ், 21, படையப்பா, 24, ராமதாஸ், 32,. கண்ணன்,28, கலைவாணன், 26 ஆகிய ஆறு பேர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.