ஆண்டிபட்டி, : மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
தேசிய நல்லாசிரியர் (ஓய்வு) தில்லை நடராஜன், உமா நாராயணன் பதிப்பகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சமூக ஆர்வலர்கள் சம்பத், ஞானபாரதி, மனோகரன், வாசவி கிளப் ஒருங்கிணைப்பாளர் ராம் சிவா, வர்த்தக பிரமுகர்கள் முத்துப்பாண்டி, பாண்டி உட்பட பலர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தலைவர் பால்ராஜ், மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துணைத் தலைவர் சுசிலா, ஊராட்சி செயலர் பாண்டியராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.