சிவகங்கை : பரமக்குடி அரசு கல்லுாரி பேராசிரியரை, காரில் கடத்திய கும்பல் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
அப்போது, கார் மற்றும் இரண்டு, 'டூ - வீலர்'களில் வந்த ஆறு பேர், கண்ணனை காரில் கடத்தினர். இது குறித்து, கண்ணனின் அண்ணன் மகன் மகேஷ், சிவகங்கை போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதலில் போலீசார் ஈடுபட்டனர்.
கடத்திய கும்பல், கண்ணனின் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
கடத்தியதற்கான காரணம் குறித்து, சிவகங்கை எஸ்.ஐ., ஜெயபாலன் விசாரிக்கிறார்.