பெருந்துறை, ஜன. 31-
மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன., 30ம் தேதி, தேசிய தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி சார்பில், தேசிய தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பேரணிக்கு கூடுதல் கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்தார். தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை, கல்லுாரி வளாகத்தில் முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்.
பேரணியில் மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியர், தொழுநோய் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதை தொடர்ந்து தொழுநோய் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொழுநோயால் பாதித்து, குணமடைந்த நான்கு பேர் கவுரவிக்கப்பட்டனர்.