ஈரோடு, ஜன. 31-
மகாத்மா காந்தி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் சிலைகளுக்கு, அமைச்சர்கள் ஈரோட்டில் நேற்று மாலை அணிவித்தனர்.
காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு, காங்., வேட்பாளர் இளங்கோவன் தலைமையில், அமைச்சர்கள் முத்துசாமி, வேலு, கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் பிறந்த நாளையொட்டி, சூரம்பட்டி நான்கு ரோடு அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். இதில் வேட்பாளர் இளங்கோவன், தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணி, காங்., துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மயிலானந்தம், த.மா.கா., பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் யுவராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.