திருவள்ளூர்:திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேஷ், பள்ளி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன், மாதா கல்வி நிறுவன இயக்குனர் ரமேஷ், பிரதியுஷா பொறியியல் கல்லுாரி முதல்வர் ரமேஷ் பாபு, ஞானபானு பள்ளி தாளாளர் ராதா ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு. பரிசு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர்.
பின், மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பாரதி மெட்ரிக் பள்ளி செயலர் ராஜாராமன், முதல்வர் சுமதி, முன்னாள் மாணவர் மற்றும் சர்வதேச பேட்மின்டன் விளையாட்டு வீரர் மோகன்ராஜ் மற்றும் மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.