கோவை:கோவை கோர்ட்களில், காலிப்பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட, 78 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும், காலியாகவுள்ள ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.
இதில், திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்டம் வாரியாக, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு எக்சாமினர், 7, ரீடர் 3, சீனியர் பேலிப் ,21, ஜூனியர் பேலிப்,28, ஜெராக்ஸ் ஆபரேட்டர்,19, என மொத்தம், 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்பணியில் சேருவதற்கான கடிதம், சென்னை ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.