மதுரை:மதுரையில், பங்கு சந்தை தொழிலில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மதுரை, கோச்சடை நடராஜ் நகர், முல்லை வீதியைச் சேர்ந்தவர் உமாசங்கர், 46. இவரது தாய் விஜயலட்சுமி, 76. உமாசங்கர், பங்கு சந்தை தொழிலில் ஆர்வமுடையவர்.
ஜன., 29ல், தேனியில் நடந்த மைத்துனர் திருமணத்திற்கு சென்று, அவர் மட்டும் வீடு திரும்பினார்.
மனைவியும், மகளும் நேற்று காலை வீட்டிற்கு வந்த நிலையில், உமாசங்கரும், விஜயலட்சுமியும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர்.
இது குறித்து, கரிமேடு போலீசார் நடத்திய விசாரணையில், பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டம், கடன் காரணமாக இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.