செந்துறை : -நத்தம் அருகே செந்துறை கோட்டைப்பட்டி பெரியாறு ஓடைபகுதியில் 10 வயது பெண் காட்டுமாடு ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.
பிள்ளையார்நத்தம் வனக்காப்பாளர் ராஜேந்திரன், வன அலுவலர் குமரேசன் ,வனவர் தர்மாராஜ் ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர் பரிசோதனை பிறகு அடக்கம் செய்யப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.