திருப்பூர்:இன்று வளர்பிறை தை மாத முகூர்த்தம் என்பதால், நேற்று, பூ மார்க்கெட்டில் பூக்களின்விலை கிடுகிடுவென உயர்ந்தது.
ஒரு கிலோ மல்லிகை பூ, 1,600 ரூபாய், முல்லை, 1,400 ரூபாய், காக்கடா பூ, 800 ரூபாய், செவ்வந்தி, 300 ரூபாய், அரளி, 400 ரூபாய்க்கு விற்றது.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது, முகூர்த்த சீசன் துவங்கி, பூக்கள் வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருகின்றனர். அதனால், விலை உயர்ந்துள்ளது.
அதிக விலை என்பதால், பெண்கள் மல்லிகை பூவை குறைந்தளவே வாங்குகின்றனர்,' என்றனர்.