சிவகங்கை:தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ரேஷன் கடைகள்,குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மதிய உணவு திட்ட தேவைக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த அரிசியில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 அடங்கிய நுண்ணூட்ட
சத்து சேர்த்து வழங்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டிய அரிசியாக வினியோகம் செய்யப்படுகிறது.
செறிவூட்டிய அரிசியில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்கிறது.
போலிக் அமிலம் பெண்களின் கரு வளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. வைட்டமின் பி12 சத்து நரம்பு மண்டலத்தின் இயல்பான செயலுக்கு உதவுகிறது.
விருதுநகர் ராமநாதபுரத்தில் திட்டம்
இத்திட்டம் முதலில் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 2022 டிச., முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம், மதிய உணவு திட்டத்திற்கு இந்த அரிசி வழங்கப்படுகிறது.
2024 மார்ச்-சிற்குள் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது வினியோக திட்டம் மூலம் ரேஷன் கார்டுகள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், மதிய உணவு திட்டம், பிற நலத்திட்டங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.