திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.
புத்தக திருவிழாவின் ஒருபகுதியாக, ஜன. 8ம் தேதி, மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 22 மையங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று மாலை, புத்தக கண்காட்சி மேடை நிகழ்வில் நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கம், புத்தகம், சான்றிதழ், கலெக்டர் வினீத் வழங்கினார்.