பல்லடம்;டூவீலரை கீழே தள்ளி வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமியை, பல்லடம் போலீசார் கைது செய்தனர்
பல்லடம் அடுத்த கே.என்., புரம், லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 58. மனைவி சுந்தரி, 54. செவிலியர். கடந்த, 22ம் தேதி தம்பதியர் டூவீலரில் பல்லடம் நோக்கி சென்றனர்.
திருச்சி ரோடு, செம்மிபாளையம் பிரிவு அருகில், வழிப்பறி ஆசாமிகள் இருவர், முத்துசாமி ஓட்டி வந்த டூவீலரை எட்டி உதைத்தனர். இதில், தம்பதியர் கீழே விழ, சுந்தரி அணிந்திருந்த, 4 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஆசாமிகள் இருவரும் பைக்கில் தப்பினர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பல்லடம் போலீசார், வழிப்பறி ஆசாமி ஒருவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மதுரை - திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மலைச்சாமி மகன் செல்வேந்திரன், 27 என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவர் மீது, மதுரை அஸ்தினம்பட்டி, கருப்பாயூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், வழிப்பறி, திருட்டு என, ஒன்பது வழக்குகள் உள்ளன.
இவரிடமிருந்து, 4 சவரன் தங்க செயின், மற்றும் டூவீலர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. வழிப்பறியில், தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.