பல்லடம்:சொத்துக்காக, அண்ணனை கடத்திய தங்கை தலைமறைவாக உள்ள நிலையில், இதில் தொடர்புடைய ஐந்து பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி அருகே தெக்கலுாரை சேர்ந்தவர் தங்கதுரை, 51; ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவரது தங்கை வேலுசாமி, மனைவி அம்பிகா, 45, மகன் கோகுல், 32 ஆகியோர், பல்லடம்அடுத்த சேடபாளையத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
தங்கதுரை வசம் உள்ள சொத்தை, அம்பிகா மற்றும் குடும்பத்தினர் தங்களுக்கு எழுதிக் கொடுக்க வற்புறுத்தி, வேலுசாமி, அம்பிகா மற்றும் கோகுல் ஆகியோர், தங்கதுரையை கடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், தங்கதுரையை மீட்டு, வேலுசாமி, கோகுல், யூசப் மகன் ரியாஷ்கான் 36, அறிவொளி நகரை சேர்ந்த ஷேக் அலாவுதீன் மகன் சாகுல் அமீது 25, மற்றும் இதயதுல்லாமகன் அஷ்ரப் அலி 29 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள அம்பிகா உட்பட மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.