சோழவந்தான் : காங்., எம்.பி., ராகுலின்இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
நகர் தலைவர் முத்துப்பாண்டி, தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரபாண்டி, சிறுபான்மை பிரிவு தென்மண்டல செயலாளர் பாதுஷா, இளைஞர் காங்., துணைத்தலைவர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிட நலப்பிரிவு தலைவர் கனகராஜ் நன்றி கூறினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
* காங்., மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, நிர்வாகிகள் பாண்டீஸ்வரன், முருகன், வினோத்கண்ணன், தவமணி பங்கேற்றனர்.